News January 7, 2026
கடலூர்: பஸ் ஸ்டாண்டில் கிடந்த பிணம்..

திட்டக்குடி பஸ் நிலையத்தில் நேற்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்துள்ளார். உடனே திட்டக்குடி போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். அதில், இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், சின்னவெண்மணியை சேர்ந்த கொளஞ்சி (75) என்பதும், கடந்த 5 மாதங்களுக்கு முன் அவர் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 2, 2026
ஒன்றிய பட்ஜெட் – பண்ருட்டி எம்எல்ஏ கண்டனம்

‘ஒன்றிய பட்ஜெட் 2026 மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கானது அல்ல. மக்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கானது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும், ஏழை, நடுத்தர மக்களைப் புறக்கணிக்கும், கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஊக்குவிக்கும்
இந்த பட்ஜெட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது’ என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
கடலூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.


