News November 25, 2025
கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்; சிறுவன் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாணவனும், மாணவியும் தனிமையில் நெருங்கி பழகியதன் காரணமாக, சிறுமி கருவுற்றார். இதையடுத்து புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி

கடலூர் மாவட்டம், பொயனபாடியில் ஸ்கேன் எந்திரத்தை பயன்படுத்தி வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த புகாரில் தென்னரசு, முருகன், செந்தில்குமார், ராஜா, ராஜேஸ்வரி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜா (36) என்பவரது குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் பேரில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News November 25, 2025
கடலூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

கடலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<
News November 25, 2025
கடலூர்: சோபாவில் இருந்து தவறி விழுந்து பலி

சிதம்பரம் வடக்கு வடுகர் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சுந்தரராஜன் (58). இவர் குடிபோதையில் தனது வீட்டின் சோபாவில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தும் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


