News October 21, 2025

கடலூர்: பனை மரம் முறிந்து விழுந்து பசுமாடு பலி

image

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம்(50), இவர் தனது வீட்டில் பின்னால் நேற்று சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு ஒன்றை கட்டி வைத்துள்ளார். அப்போது பெய்த கனமழையினால் அதற்கு அருகே இருந்த பனை மரம் முறிந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சமபவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 21, 2025

BREAKING: கடலூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

கடலூர்: ரெட் அலர்ட் – தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்ம் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077 மற்றும் 04142 –220 700 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

ரெட் அலர்ட் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு இன்றும் மற்றும் நாளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் குளிப்பதையும், இடி மின்னலுடன் கனமழை பெய்து பெய்யும் பொழுது திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!