News December 7, 2025

கடலூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற இணையதளம்<<>> வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 4, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது வழக்கு

image

விருத்தாசலம் அடுத்த எடச்சித்தூரை சேர்ந்தவர் முருகவேல்(27). இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகவேல் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!