News June 20, 2024
கடலூர் படை வீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு

கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனால் இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Similar News
News November 10, 2025
கடலூர்: மின்கம்பத்தில் டூவீலர் மோதி விவசாயி பலி

வாழகொல்லையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). விவசாயியான இவர் தாமோதரன், வீரமணி ஆகியோருடன் டூவீலரில் வடப்பாக்கம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 10, 2025
கடலூர்: ரயில் மோதி துடிதுடித்து பலி

விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய விருத்தாசலம் போலீசால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
News November 10, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


