News February 7, 2026
கடலூர்: நடந்து சென்றவர் பைக் மோதி பலி

கீரப்பாளையம் கரைமேட்டை சேர்ந்தவர் நாகலிங்கம் (49). இவர் கடந்த பிப்.5 அன்று செட்டிக்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது என்னநகரத்தை சேர்ந்த சுரேந்தர் (27) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மோதியதில், நாகலிங்கம் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News February 9, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழகடம்பூரை சேர்ந்தவர் விஸ்வராஜ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ரஞ்சித்துடன் (23) பைக்கில் நெடுஞ்சேரி நோக்கி சென்றபோது, சாலையோரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.08) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.09) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது