News October 23, 2025
கடலூர்: தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

குள்ளஞ்சாவடி அடுத்த தங்கலிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரது மகன் தொழிலாளி மணி (55). இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆடு, மாடுகளை பெருமாள் ஏரிக்கரை அருகில் உள்ள வடிகால் வாய்க்கால் அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 23, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.22) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். செம்மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்படலாம் என தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
கடலூர்: வங்கி வேலை.. APPLY NOW

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 23, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று (அக்.23) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.