News March 22, 2024
கடலூர் தொகுதி பாமக-விற்கு ஒதுக்கீடு

கடலூரில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மற்றும் காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
கடலூர்: குட்டையில் மிதந்த பிணம்

கடலூர் முதுநகர் அடுத்த சுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (63). மீனவரான இவர் கடந்த மாதம் 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடலூர் செல்லங்குப்பம் மீன்பிடி குட்டையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் பிணமாக மிதந்துள்ளார். தகவலறிந்த முதுநகர் போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி, தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழகடம்பூரை சேர்ந்தவர் விஸ்வராஜ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ரஞ்சித்துடன் (23) பைக்கில் நெடுஞ்சேரி நோக்கி சென்றபோது, சாலையோரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


