News August 27, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

கடலூர் மக்களே.. தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News August 28, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.27) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
கடலூர் மாவட்டத்தில் மின் நிறுத்தம் ஒத்திவைப்பு!

கடலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.28) நடைபெறுவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்த அடரி துணை மின் நிலையம், மங்களூர் துணை மின் நிலையம் மற்றும் சிறுப்பாக்கம்துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக திட்டக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அறிவித்திருந்தார். ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுதாக தெரிவித்துள்ளனர்.
News August 27, 2025
கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

கடலூர் மக்களே.. மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!