News March 22, 2024

கடலூர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

image

தேமுதிக சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 10, 2026

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

image

கடலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்னப்பிக்க<> https://www.tahdco.com<<>> என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

சிதம்பரம்: 50 பவுன் தங்க காசு மாலை வழங்கிய பக்தர்

image

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பொது தீட்சிதர்களிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட பொதுதீட்சிதர்கள் சிறப்பு பூஜை செய்து சிவகாம சுந்தரி அம்பாளுக்கு அணிவித்தனர்.

error: Content is protected !!