News October 14, 2025
கடலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 14, 2025
கடலூர்: தண்டவாளத்தில் தலை இல்லாமல் கிடந்த உடல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், மணிமுத்தாறு மேம்பாலத்திற்கும் இடையே நேற்று இரவு தண்டவளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
கடலூர் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

கடலூர் இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: சிதம்பரம் & கடலூர்
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 14, 2025
கடலூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை

பரிசமங்கலம் கிராமத்தில் பிச்சம்மாள் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் வான வெடி வெடித்ததை தொடர்ந்து, நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி இரு சமுதாயங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.