News December 15, 2025
கடலூர்: திருமணம் மறுப்பு-இளைஞர் தற்கொலை

கிள்ளையைச் சேர்ந்தவர் உலகநாதன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகநாதன் தனது காதலியை சந்தித்து திருமணம் செய்யக் கூறியபோது அவர் மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த உலகநாதன் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் நன்னீர், உள்நாட்டு வெனாமி இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே பதிவு செய்யாமல் இருக்கும் பண்ணை உரிமையாளர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04142-243033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News December 19, 2025
கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

கடலூர் மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை கரண்ட் இருக்காது!

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கடலூர் டவுன், செம்மண்டலம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, செம்மங்குப்பம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


