News September 20, 2025
கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அரசு என்ற வீரபுகழ் (18). நடுவீரப்பட்டு அருகே பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த அசோக்குமார் (26) என்பவரை கடத்திய வழக்கு தொடர்பாக நேற்று புத்திரன்குப்பம் செம்மண் குவாரி அருகே பதுங்கி இருந்த வீரபுகழை நடுவீரப்பட்டு போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசில் இருந்து தப்பிக்க ஓடிய போது தவறி விழுந்ததில் வீரப்புகழுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
Similar News
News November 8, 2025
கம்மாபுரம்: மாணவி பட்டாசு பாம்பு மாத்திரை தின்று தற்கொலை

கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டிமூளையை சேர்ந்தவர் வீரப்பன் மகள் சகானா (17). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் வருடம் படித்து வரும் சஹானா வீட்டு வேலை செய்யாததால் அவரது தாய் சுபிகா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சஹானா தீபாவளி பட்டாசு பாம்பு மாத்திரை சாப்பிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
கடலூரில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

கடலூரில் நவம்பர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (8.11.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
கடலூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


