News September 4, 2025
கடலூர்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞான சௌந்தரி. இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் குணஸ்ரீ (1) என்ற குழந்தை இன்று (செப்.4) காலை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிலிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை குணஸ்ரீ தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 19, 2025
கடலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

கடலூர் மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 19, 2025
கடலூர்: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News September 19, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.19) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 131.6 மி.மீ, பண்ருட்டியில் 130 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 11.1 மி.மீ, விருத்தாச்சலத்தில் 7.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி 22 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 14.2 மி.மீ, கடலூர் 27.7 மி.மீ, தொழுதூரில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.