News September 4, 2025
கடலூர்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞான சௌந்தரி. இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் குணஸ்ரீ (1) என்ற குழந்தை இன்று (செப்.4) காலை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிலிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை குணஸ்ரீ தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 6, 2025
வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தினரை கௌரவித்த எஸ்பி

காவலர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தாரை கௌரவிக்கும் விதமாக, கடந்த 1993ஆம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தில்லை கோவிந்தன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் குடும்பத்தாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்து குழந்தைக்கு பரிசு வழங்கி நலம் விசாரித்து கௌரவிக்கப்பட்டது.
News September 6, 2025
கடலூர்: கோழி பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

கடலூர் மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
லால்பேட்டை: ரேஷன் பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கடலூர் மாவட்டம், லால்பேட்டை அம்பேத்கர் தெருவில் புதிய நியாய விலைக்கடையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (செப்டம்பர் 6) திறந்து வைத்தார். இதில் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.