News January 4, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி பலி

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்த ஞான ஜோதி (63) என்பவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம்- மேட்டுக்குப்பம் சாலையில் சென்றபோது, திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஞானஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 6, 2026
கடலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 6, 2026
கடலூர் அருகே பிடிபட்ட கொள்ளையன்

குறிஞ்சிப்பாடி சத்தியம் நகரைச் சேர்ந்த செல்வநாதன் (69) என்பவரது வீட்டில், அடையாளம் தெரியாத நபர் வீட்டினுள் நுழைந்து பீரோவின் சாவியை எடுத்து, 12 சவரன் தங்க நகை மற்றும் ரூ.40,000 பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருடனை தேடிய நிலையில், வடலூர் புதுநகரைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
News January 6, 2026
கடலூரில் இன்று மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டம் கீழக்குப்பம், வடக்குத்து, மேலப்பாளையம், ஒறையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.06) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்தந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


