News November 25, 2025

கடலூர்: சோபாவில் இருந்து தவறி விழுந்து பலி

image

சிதம்பரம் வடக்கு வடுகர் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சுந்தரராஜன் (58). இவர் குடிபோதையில் தனது வீட்டின் சோபாவில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தும் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 26, 2025

கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

image

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இறால் மற்றும் உவர் மீன் வளர்ப்போர் மானியத்துடன் கூடிய புதிய குளங்கள் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இறால் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக அதிகபட்சமாக ரூ.5.40 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதற்கு 31.12.2025-க்குள் பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!