News January 22, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை 22 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமானது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பண்ருட்டி போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 27, 2026

கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 27, 2026

கடலூர்: 51 கம்பெனிகள் மீது நடவடிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் நிறுவனங்கள் ஏதேனும் செயல்படுகிறதா என தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் விதிமுறைகளை மீறி இயங்கிய 51 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

கடலூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

image

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.

error: Content is protected !!