News December 16, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து, பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், வேலன் (21) என்ற வாலிபர் சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய நிலையில், போலீசார் அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News December 17, 2025

கடலூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 17, 2025

கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

கடலூர் மாவட்டத்தின் நாளைய பவர் கட் விபரம்

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் சித்தரச்சூர், மேல்பட்டாம்பாக்கம், மணலுார், பண்ருட்டி கிராம பகுதி, திருவாமூர், அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, கோ.பூவனூர், ஆலடி, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!