News September 5, 2025
கடலூர் சிப்காடில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

கடலூர் சிப்காட் தனியார் இரசாயனத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்ட இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் இன்று (செப்.5) உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார். பாதுகாப்புப் பணி சம்பந்தமாக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று உரிய விசாரணை எடுப்பதாக கூறினார்.
Similar News
News April 6, 2026
கடலூர்: 5,538 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி என 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 3099 மூத்தகுடிமக்கள், 2439 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 538 பேர் தபால் வாக்கு அளிக்க படிவம் வழங்கி உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News April 6, 2026
கடலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News April 6, 2026
CM மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் – அமைச்சர் அறிக்கை வெளியீடு

அமைச்சர் M. R. K. பண்ணீர்ச்செல்லவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை கடலூர், மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் CM மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


