News March 21, 2024
கடலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சீரடி சாய்பாபா ஆலயத்தில் பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News November 5, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News November 4, 2025
கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பணி இடை மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த ஆ.எல்லப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் இன்று உத்தரவிட்டுள்ளார். இவருக்கு பதிலாக அரியலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ் கடலூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 4, 2025
கடலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


