News September 24, 2025

கடலூர்: கூடுதலாக 31 வாக்குச்சாவடி உருவாக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் சட்டமன்றத் தொகுதியில் பகுப்பாய்வுக்கு முன் 227 வாக்குச்சாவடி, புதிய வாக்குச்சாவடி மையம் 31, இடம் மற்றும் கட்டட மாற்றம் 2 என பகுப்பாய்வுக்குப் பின்னர் மொத்தம் 258 வாக்குச்சாவடி உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 24, 2025

பாலம் கட்டும் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்!

image

கடலூர் மாவட்டம் ஓட்டேரி-பில்லாலி இடையே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் கெடிலம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு இன்று(செப்.24) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கால் நாட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கற்றனர்.

News September 24, 2025

கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய நபர் போக்சோவில் கைது

image

கடலூர் மாவட்டம் புவனகிரி சரவணா நகரில் தெய்வக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமிக்கு சாக்லேட் மற்றும் பழம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் புவனகிரி காவல் நிலையத்தில் புகராளித்தனர். அதனைத் தொடர்ந்து புகாரின்பேரில், புவனகிரி போலீசார் தெய்வகண்ணு மீது போக்சோ வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

News September 24, 2025

கடலூர்: திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

image

விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(26). இவருக்கும் விஜயமா நகரத்தை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் ராஜதுரை சிங்கப்பூருக்கு வேலைக்கு நிலையில், பாக்கியலட்சுமி புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பாக்கியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!