News April 15, 2025

கடலூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறை காலம் வருவதால் சிறுவர்கள் நீர்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் தான் சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் இருக்க SHARE செய்யவும்.

Similar News

News October 14, 2025

கடலூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

பரிசமங்கலம் கிராமத்தில் பிச்சம்மாள் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் வான வெடி வெடித்ததை தொடர்ந்து, நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி இரு சமுதாயங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.

News October 14, 2025

கடலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

News October 14, 2025

கடலூர்: 4 போலீசார் அதிரடி இடமாற்றம்

image

கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் காங்கேயன், கம்மாபுரம் காவல் நிலைய காவலர் மணிகண்டன், நடுவீரப்பட்டு காவல் நிலைய காவலர் தீனதயாளன், கடலூர் புதுநகர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முத்துக்குமாரன் ஆகியோரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!