News November 1, 2025
கடலூர்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கடலூர் மாவட்டம், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் ப்ரீத்தி (18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரீத்தி தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த காரணத்தால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ப்ரீத்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

கடலூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 1, 2025
கடலூர்: 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

பண்ருட்டியை சேர்ந்தவர் கார்த்தி (31). கடந்த 2013-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதான கார்த்தி, ஜாமீனில் வந்தார். பிறகு வழக்கு விசாரணைக்கு பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகாமல் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பண்ருட்டி போலீசார், அவரை தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கம்மசெட்டி சத்திரத்தில் வசித்த கார்த்தியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News November 1, 2025
சிதம்பரம்: மீன் வலையில் சிக்கிய முதலை!

சிதம்பரம் அருகே உள்ள மீன் குட்டையில் நேற்று சிலர், வலைவீசி மீன் பிடித்தனர். அப்போது குட்டைக்குள் முதலை ஒன்று கிடந்ததை பார்த்த அவர்கள், சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வலைவீசி, அந்த முதலையை பிடித்தனர். பிடிபட்ட சுமார் 7 அடி நீளமுடைய முதலை ஆகும். பின்னர் அது வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.


