News June 30, 2024
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக நாளை (1-ம் தேதி) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சென்று 2 ஓ.ஆர்.எஸ். பாக்கெட் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு சேர்த்து வழங்குவார்கள் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Similar News
News September 11, 2025
கடலூர்: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
வெலிங்டன் நீர்த்தேக்க சீரமைப்புக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு

திட்டக்குடி, கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில், நீர்த்தேக்க கரைகள், முதன்மை மற்றும் உபரி கால்வாய்கள் புனரமைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கை திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 11, 2025
கடலூர்: தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, நர்சிங் கல்லூரி மாணவிகள் சென்னையில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தனர். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், நர்சிங் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டினர்.