News March 19, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
Similar News
News August 8, 2025
கடலூர் – புதுவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

கிருமாம்பாக்கம் அருகே உள்ள கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (ஆக.,8) நடைபெற உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News August 8, 2025
கடலூர்: சிலிண்டர் குறித்த புகாரா? இனி கவலை இல்லை

கடலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News August 8, 2025
கடலூர் மாவட்டம்: எந்தப் பதவியில் யார் ?

▶️ மாவட்ட ஆட்சியர் – சிபி ஆதித்யா செந்தில் குமார்
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – எஸ்.ஜெயக்குமார்
▶️ மாவட்ட வருவாய் அலுவலர் – ம. ராஜசேகரன்
▶️ கடலூர் மாநகராட்சி ஆணையர் – எஸ்.அனு
▶️ திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை – ரா. சரண்யா
▶️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!