News January 15, 2026

கடலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை கடலூர் மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News January 22, 2026

கடலூர்: பைக் மோதி மூதாட்டி பலி

image

புவனகிரி அடுத்த தெற்குத்திட்டையை சேர்ந்தவர் வசந்தா(70). இவர் தெற்குதிட்டையில் உள்ள மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டூவிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் வசந்தா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 22, 2026

கடலூர்: ரயில் மோதி 5 மான்கள் பரிதாப பலி – சோகம்

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் அருகே உள்ள காப்புக்காட்டில் இருந்து நேற்று (ஜன.21) காலை 5 மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே சுற்றித்திரிந்தன. அவை குப்பநத்தம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் சுற்றித்திரிந்த போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உடல் சிதறி 5 மான்களும் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!