News December 24, 2025

கடலூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியை சேர்ந்தவர் திருமால் (32). இவரது மனைவி விஷ்ணுபிரியா (31). திருமால் கடலூர், செம்மண்டலத்தில் உறவினர் வீட்டில் தங்கி ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை அதிகமாகியுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் மீது வழக்கு

image

சிதம்பரம் அருகே சிலம்பிமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (35). திருமணமான இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்து, செந்தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.

News December 28, 2025

கடலூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE <<>>
8. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

image

பாச்சார பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரசாயி (48). இவர் நேற்று சண்முகம் என்பருடன் டூவீலரில் கன்னி தமிழ்நாடு பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியதில் அரசாயி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் காயங்களுடன் உயர் தப்பினார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வடலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!