News September 3, 2025
கடலூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News September 9, 2025
ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News September 9, 2025
கடலூர்: தப்பி ஓடியவரை சுட்டுப்பிடித்த போலீசார்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். கஞ்சா போதையில் 3 இளைஞர்கள், 4 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் கந்தவேல் என்பவர் தப்பி ஓடினார். மேலும் தப்பியோடிய கந்தவேல் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 9, 2025
ஆலப்பாக்கம்: வீடுகள் கட்டுமான பணி-ஆட்சியர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (09.09.2025) காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் இருந்தனர்.