News January 23, 2026
கடலூர்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட உள்ளது. இதற்கு செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரது வயலில், நேற்று (ஜன.27) அதே பகுதியை சேர்ந்த திருஞானம் (52) என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மாடு மிதித்த போது, மின்சாரம் தாக்கி மாடு துடித்து துடித்து உயிரிழந்தது.
News January 28, 2026
கடலூரில் இன்று மின்தடை அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.28) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வடலூர் சபைவளாகம், பார்வதிபுரம், வடலூர் இந்திரா நகர், ஜோதி நகர், மாருதி நகர், கோட்டக்கரை, நடேசனார்நகர், வீணங்கேணி, மேட்டுக்குப்பம் ,சீராங்குப்பம், சேப்ளாநத்தம், செங்கால்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
News January 28, 2026
கடலூர்: ரோந்து பணி காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.27) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


