News December 5, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.4) இரவு 10 மணி முதல் இன்று(டிச.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ?

image

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, ஊரில் வசிக்காமை போன்ற காரணங்களுக்காக 2,62,650 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 5, 2025

கடலூர் அருகே இளைஞர் மீது துப்பாக்கி சூடு

image

கிள்ளை அடுத்த பின்னத்தூரை சேர்ந்தவர் தவுசிக் (18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான முஸ்தபா (18) தவுசிக்கின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தவுசிக் தந்தையின் பழைய ஏர் கன் வகை துப்பாக்கியை எடுத்து பார்த்த கொண்டிருந்த போது தவறுதலாக தவுசிக்கின் வலது காலில் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தவுசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 5, 2025

கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

image

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!