News October 25, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 25, 2025

கடலூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <>க்ளிக் செய்து <<>>உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

கடலூர்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

விருத்தாசலம் வட்டம் கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), என்பவர் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் நேற்று (அக்.24) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 25, 2025

கடலூர்: ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்

image

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் என்பவரது மகள் ராதிகா (35). ஆலடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று பள்ளி தாளாளர் மகனான பிரின்ஸ் நவீன் (37) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!