News October 17, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 17, 2025

கடலூர்: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு

image

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பலகாரம் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணை நேற்று வெளியிட்டார். இந்த எண்ணில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுப் பொருட்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

கடலூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !

News October 17, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 17) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 58.8 மில்லி மீட்டர், சிதம்பரம் 42 மில்லி மீட்டர், புவனகிரி 41 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 21 மில்லி மீட்டர், வேப்பூர் 25 மில்லி மீட்டர், கடலூர் 22.2 மில்லி மீட்டர், வானமாதேவி 13.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!