News September 23, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.22) இரவு 10 மணி முதல் இன்று (செப்.23) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

கடலூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேணுமா?

image

கடலூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்க பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8- 20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா கடலூர் தொழிலாளர் நலத்துறை அலுலகத்தில் 04142-223984 eன்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News September 22, 2025

கடலூர்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

புவனகிரி அடுத்த சேர்ந்திரக்கிள்ளையை சேர்ந்தவர் கோகுலசந்துரு. இவர் நேற்று தனது பைக்கில் விருத்தாசலம்-சேலம் சாலை வழியாக வேப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.வேப்பூர் அடுத்த என். நாரையூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த டேங்கர்லாரி பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கோகுலசந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2025

கடலூர்: நவராத்திரியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

image

கடலூர் மாவட்டம், நல்லாத்தூரில் திரிபுரசுந்தரி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் அம்பாளை வணங்கி தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் நோய்கள் குணமாவதோடு, மீண்டும் நம்மை அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நவராத்திரி தினத்தன்று இக்கோவிலில் சென்று வழிப்படுவது கூடுதல் சிறப்பாகும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!