News September 28, 2025

கடலூர் அருகே 21 பேர் மீது வழக்கு

image

கடலூர் அருகே சாத்தங்குப்பத்தில் நேற்று காலை பழைய நிழற்குடை இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 7, 2025

கடலூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 7, 2025

கடலூர்: மனைவி கண்டித்ததால் தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் தொழிலாளி அன்பழகன் (46). இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை, அவரது மனைவி வனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News November 7, 2025

கடலூர்: லாரி மோதி 2 பேர் பரிதாப பலி

image

நெய்–வேலி அருகே வடக்குத்து பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஸ்டான்லி (32), புவனகிரி அருகே மேலவன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார் (29) ஆகியோர் நேற்று வேலைக்கு செல்வதற்காக கடலூர் ஜவான்பவன் புறவழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி டூவீலர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் (29) சம்பவ இடத்திலும், ஆரோக்கிய ஸ்டான்லி மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

error: Content is protected !!