News November 13, 2025

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

image

பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்செல்வன் (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்செல்வன் நேற்று தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 13, 2025

கடலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருமாள் ஏரி, ஸ்ரீ நெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீ புத்தூர் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்தூர் ஏரி, வாலாஜா ஏரி உள்ளிட்ட 33 ஏரிகளுக்கு 3 ஆண்டு கால மீன் பிடி குத்தகைக்கு நவ.11 முதல் மின்னணு ஒப்பந்தப்ப புள்ளி வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!