News March 23, 2024
கடலூர் அருகே விபத்து.. 40 பயணிகள் தப்பினர்

திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.
Similar News
News August 17, 2025
புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம்

கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த மல்லிகா என்பவர் காலமானார். இந்நிலையில், அவரது இரு கண்களையும் தானமாக பெற்று புதுவை தனியார் கண் மருத்துவமனைக்கு புவனகிரி அரிமா சங்கம் சார்பில் நேற்று மாலை வழங்கப்பட்டது. மேலும் கண்களை தானமாக வழங்கிய அவருடைய குடும்பத்தாருக்கும் தானம் பெற உதவிய சங்கத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
News August 17, 2025
கடலூர்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 17, 2025
கடலூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!