News April 22, 2024
கடலூர் அருகே விபத்து; மரணம்

விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (38).நேற்று பெரியவடவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.இப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி வெங்கடேசன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
News February 10, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News February 10, 2026
கடலூர்: 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் – அமைச்சர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்ப்பதாக கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற பிப்.12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவ்வகையில், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


