News May 1, 2024
கடலூர் அருகே விபத்து;மரணம்

நேற்று புவனகிரி பெருமாத்தூர் பகுதியில் மின்சார பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் மின் கம்பம் அலட்சியமாக எடுத்துச் செல்லப்பட்டது.அப்பொழுது இருசக்கர வாகனத்தில் விருதாச்சலம் சாலையில் சென்று கொண்டிருந்த மயிலாடுதுறை சேர்ந்த பாபு (42) என்பவர் எதிர்பாராத விதமாக ஜேசிபி வாகனத்தில் மோதி,தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News May 7, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மே.1ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போமில் TN CM HELPLINE என்ற appஐ பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதினர்களுக்கும் சேர் செய்யுங்கள்.
News May 7, 2025
கடலூர்: பதக்கங்களை குவிக்கும் 13 வயது மாணவி

கடலுாரைச் சேர்ந்த 13வயது மாணவி யாழினி, டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணவி யாழினி, புனித மரியன்னை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில அளவிலான போட்டிகளில் இதுவரை ஒன்பது முறை பங்கேற்று 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.