News March 21, 2024
கடலூர் அருகே ரோந்து பணி அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
கடலூர் மாவட்டம் ஒரு பார்வை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News September 7, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.
News September 6, 2025
வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தினரை கௌரவித்த எஸ்பி

காவலர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தாரை கௌரவிக்கும் விதமாக, கடந்த 1993ஆம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தில்லை கோவிந்தன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் குடும்பத்தாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்து குழந்தைக்கு பரிசு வழங்கி நலம் விசாரித்து கௌரவிக்கப்பட்டது.