News March 20, 2024
கடலூர் அருகே ரூ.5000 பறிமுதல்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.20) சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகமது கௌஸ் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சம் இருந்ததால் இதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் தனி வட்டாச்சியர் பலராமனிடம் வழங்கப்பட்டது.
Similar News
News September 10, 2025
கடலூர் மாவட்டம் ஒரு பார்வை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News September 10, 2025
குள்ளஞ்சாவடி பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
News September 10, 2025
கடலூர்: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டியில் அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.