News September 12, 2025

கடலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

image

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியநல்லூரை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி சுந்தரி (50). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் அத்தியநல்லூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்த போது, மின்னல் தாக்கியதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.18) இரவு 10 மணி முதல் இன்று (செப்.19) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

கடலூர் மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

கடலூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!

News September 18, 2025

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி சுவாமி தரிசனம்

image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற கருத்தை வலியுறுத்தி, இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரத்திற்கு நேற்று இரவு வருகை தந்தார். இந்நிலையில் இன்று (செப்.18) காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளனர்.

error: Content is protected !!