News October 31, 2025
கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பரிதாப பலி

கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அருகில் உள்ள நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
உதவித்தொகை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற <
News October 31, 2025
கடலூர்: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

கடலூர் மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
கடலூர்: ஹோட்டல் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுதானிய உணவு உணவகம் அமைத்திட மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிர் சுய உதவி குழுவினர் வரும் நவ.10-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


