News May 2, 2024
கடலூர் அருகே பெண்கள் மட்டுமே சுமந்து சென்ற தேர்!

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் அடுத்த நெல்லிக்குப்பத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த பெருவிழாவில் குழந்தை இயேசு தேர் மற்றும் மாதா தேரை பெண்கள் மட்டுமே தங்களின் தோள்களில் சுமந்து தூக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 8, 2026
கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News April 8, 2026
BREAKING: கடலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனுமதியளித்தும் தொடர்ந்து 2 நாள் சென்னையில் பிரச்சாரத்தை விஜய் ரத்துசெய்தார்.