News July 8, 2025
கடலூர் அருகே தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 23, 2025
கடலூர்: ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025