News October 11, 2025
கடலூர் அருகே காவல் நிலையத்தில் அடிதடி

ஆனந்தகுடியைச் சேர்ந்த முகில் வேந்தன் என்பவர் என்னநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள முகில் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல் நிலையம் வந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
Similar News
News October 11, 2025
35% மானியம்: கடலூர் கலெக்டர் அறிவிப்பு

கடலூரில் விலைப் பொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் அலகுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், பொது பிரிவினருக்கு 25 % மானியமும், மற்ற பிரிவினர்களுக்கு கூடுதலாக 10% மானியமும் வழகப்படும். வேளாண் தொழில் முனைவோர்கள் வேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் 9659299219 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
News October 11, 2025
கடலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 11, 2025
கடலூர் அருகே தொழிலாளி பரிதாப பலி

பெண்ணாடம் அடுத்த தொளாரை சேர்ந்தவர் தொழிலாளி ஆனந்த செல்வம் (43). இவர் இன்று தனது பைக்கில் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பகுதியில் சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த ஆனந்த செல்வம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.