News June 14, 2024

கடலூர்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

image

கடலூரில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வருகிற செவ்வாய்கிழமைக்கு பிறகு தமிழகத்தில் ஓடினால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். மீண்டும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களாக மாற்றும் வரை பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படாது என்றார்.

Similar News

News March 3, 2026

கடலூர் ஆட்சியரிடம் வழங்கிய ஆக்ஸி மீட்டர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட 240 எண்ணிக்கையிலான ஆக்ஸிமீட்டரை, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மருத்துவ பயன்பாட்டிற்காக துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மரு.ராஜா அவர்களிடம் நேற்று (02.03.2026) வழங்கினார். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் பாலசுப்பரமணியம் உட்ப பலர் உள்ளனர்.

News March 3, 2026

கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சாரம்

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் மேற்கு ஒன்றியம் நடுவீரப்ட்டு, புதுக்குப்பம், பட்டீஸ்வரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வாக்குச்சாவடி திருவிழா என்ற பெயரில், திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை துண்டு பிரசுரமாக வினியோகம் செய்து, நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

கடலூர்: தூக்கில் தொங்கிய ஆசிரியர்

image

திட்டக்குடியை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (35) ஆசிரியர், மனைவி ஸ்வேதாவுடன் காந்தி நகரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்த நரசிம்மன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!