News August 5, 2024
கடலூர் அமைச்சரின் நாளைய பயண திட்டம்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் முன்னிலையில் நாளை காலை 10 மணியளவில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில், புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள் மற்றும் புதிய நகர்ப்புற பேருந்துகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News January 30, 2026
கடலூர்: சகல செளபாக்கியமும் கிடைக்க இங்கு போங்க !

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
News January 30, 2026
கடலூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
பண்ருட்டி விவசாயி மீது தீ வைப்பு: இ.பி.எஸ் கண்டனம்

‘பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’ என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


