News September 9, 2025
கடலூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனம் வழங்கல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை இன்று (08.09.2025) வழங்கினார். அப்போது தனித்துணை ஆட்சியர் தங்கமணி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 8, 2025
கடலூர்: 8-வது படித்தவர்களுக்கு அரசு வேலை

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள<
News November 8, 2025
கடலூர்: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

கடலூர் மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233170>>பாகம்<<>>-2)


