News March 20, 2024

கடலூர்:பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

Similar News

News February 10, 2026

கடலூர்: 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் – அமைச்சர்

image

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்ப்பதாக கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற பிப்.12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவ்வகையில், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்‌.

News February 10, 2026

கடலூர்: செய்முறை தேர்வு; 30,550 மாணவர்கள் பங்கேற்பு

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று முதல் தொடங்கி வருகிற பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அவ்வகையில், கடலூர் மாவட்டத்தில் 196 மையங்களில் 30,550 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் எல்லாம் செய்யலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!